மரபணு மாற்றுப் பயிர்களால் பேரழிவு காத்திருக்கிறது
lankasri.comஇயற்கைக்கு மாறாக உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களால் விளைச்சல் நிலங்களின் தன்மை மிக மோசமாக கெட்டு வருவதாகவும் அது சூழலுக்கு பேரழிவாக அமையக் கூடும் என்றும் இங்கிலாந்தின் இளவரசர் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 Aug 2008;

செவ்வாயில் தூசு படலம்
lankasri.comஅமெரிக்காவின் "பீனிக்ஸ்" விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது.

15 Aug 2008;

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்
lankasri.comநாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:

13 Aug 2008;

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்
நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

10 Aug 2008;

சர்க்கரை நோயாளிகளின் உறுப்புகளை காக்கும் "பிஞ்சு' முட்டைக்கோஸ்
lankasri.comநீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

06 Aug 2008;

விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்
lankasri.com உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

06 Aug 2008;

உலகிலேயே சிறிய பாம்பினம் கண்டுபிடிப்பு.
lankasri.comகரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படோசில் (Barbados) இல் அழிவின் விளிம்பில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில், பாறைகளுக்கு கீழே வாழ்ந்து வருகின்ற சுமார் 10cm நீளமுள்ள பாம்பை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

04 Aug 2008;

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு
lankasri.comஉயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

02 Aug 2008;

சனிக்கிரகத்தின் நிலாவில் நீர்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
lankasri.comசனிக்கிரகத்தின் நிலாவில் நீர் நிரம்பிய குளம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் பூமிக்கு அடுத்த படியாக வேறு ஒரு கிரகத்தின் தரைப்பரப்பில் நீர் இருப்பது தற்போதுதான் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

31 Jul 2008;

மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது
lankasri.comமீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

29 Jul 2008;

அதிக மன அழுத்தம் ஆண்களில் நீரிழிவு நோயை ஊக்குவிக்கிறது.
lankasri.comமன அமைதியின்மை, மன அழுத்தம் மற்றும் நித்திரையின்மை ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நீரிழிவு வகை 2 (type 2 diabetes) நோய் ஏற்படுவதை ஊக்குவிப்பதாக ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

28 Jul 2008;

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோள்
lankasri.comசூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனைப் போன்ற அளவு கொண்ட இந்தப் புதிய கோள், சூரியனைவிட சற்று பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் கோள் கடந்த ஜூலை 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

26 Jul 2008;

புகையிலையில் இருந்து புற்றுநோய்க்கு நிவாரணி
lankasri.comபுற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்ற புகையிலையில் இருந்து கூட குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஒன்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

24 Jul 2008;

தினம் 2 கப் டீ குடித்தால் மூளை திறன் அதிகரிக்கும்
lankasri.comடீ குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு என்று சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர்கள் இது தொடர்பாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:-

19 Jul 2008;

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.
lankasri.comஇந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.

19 Jul 2008;

Cannabis வகை போதைப் பொருளில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.
lankasri.comCannabis போன்ற போதைப் பொருட்களை புகைப்பதால் பல தீமைகள் ஏற்படுகின்ற போதும் அவற்றை ஆய்வுசாலைகளில் பகுத்து அவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சில இரசாயனக் கூறுகளை (THC போன்றவை) புற்றுநோய்க்கு மருந்தாக பாவிக்க முடியும் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

18 Jul 2008;

மலேரியாவுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணு எயிட்ஸை ஊக்குவிக்கும் அவலம்.
lankasri.comமலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

18 Jul 2008;

தூக்கமின்மை ஞாபகக் குழப்பத்துக்கு இட்டுச் செல்கிறது
lankasri.comஇரவில் சரியான தூக்கமின்மை ஞாபகக் குழப்பத்துக்கு இட்டுச் செல்வதாக ஜேர்மனி மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த ஞாபகக் குழப்பத்தால் சரியான வகையில் நினைவில் உள்ள தகவல்களை மீளப் பெற முடிவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

17 Jul 2008;

தாயின் உடல் நிறை அதிகரிப்பு குழந்தைகளை பாதிக்கும்
lankasri.comகருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

17 Jul 2008;

மலேரியாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு
lankasri.comஉலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

17 Jul 2008;

Previous | Next

   

 

wntechnology

Technologyreview
Java sun
cntc
Nist
Cnn
ls.eso
Google 
Yahoo 
Msn 
   

  Site Meter

Terms of Use | Privacy Statement © 2007 Lankasritechnology. All rights reserved